மகள் ஜெ.இ.இ. தேர்வு எழுதுவதற்காக தந்தை ஒருவர் 12 மணி நேரத்தில் 300 கிமீ பைக் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.பிகார் மாவட்டம் நாளந்தாவைச் சேர்ந்தவர் விவசாயியான தனஞ்சய் குமார். இவரது மகளுக்கு ஜெ.இ.இ. தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் உள்ள துபுதானா என்ற இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கின் காரணமாக பேருந்துப் [போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால், செவ்வாயன்று நடைபெற்ற தேர்வில் மகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டுமென்றால் ஏறக்குறைய 300 கிமீ தாண்டியுள்ள துபுதானாவிற்கு பைக்கில் செல்வதே ஒரே வழி என்று தனஞ்சய் தீர்மானித்தார்.இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை மகளுடன் நாளந்தாவிலிருந்து பைக்கில் கிளம்பியுள்ளார். எட்டு மணி நேரப் பயணத்தில் பொகாரோ வந்தடைந்தவர், அங்கு சிறிது ஓய்வெடுத்து விட்டு, அங்கிருந்து 135 கிமீ தொலைவில் உள்ள ராஞ்சிக்கு திங்கள் மதியம் வந்து சேர்ந்துள்ளார்.மகளுக்காக 12 மணி நேரத்தில் 300 கிலோ மீட்டரை பைக்கில் கடந்த அவரது இந்தச் செயல் சமூக வலைத்தளத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups