சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் - காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் - ஆணையிடப்படுகிறது. - அரசாணை (நிலை) எண். 28 நாள். 05.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 06, 2020

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் - காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் - ஆணையிடப்படுகிறது. - அரசாணை (நிலை) எண். 28 நாள். 05.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் - காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் - ஆணையிடப்படுகிறது.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-2) துறை
அரசாணை (நிலை) எண். 28 நாள். 05.09.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி ஆவணி 20
படிக்கப்பட்டவை : அரசாணை (நிலை) எண்.163, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சஉதி.2) துறை , நாள் 18.08.2010.

ஆணை :
மேலே படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை நிர்ணயம் செய்தும், சத்துணவுப் பணியாளர் காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் செய்தல், விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்து நேர்முகத் தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்குதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் குறித்தும் ஆணையிடப்பட்டுள்ளது. 2. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையலர் மற்றும் ஒரு சமையல் உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் பணியிலிருந்து வயது முதிர்வு ஓய்வு பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது

3. மேலே படிக்கப்பட்ட அரசாணையில் சத்துணவுப் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை . புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை செவ்வனே செயல்படுத்த அவ்வப்பொழுது ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவது அவசியமானது ஆகும். ஆயினும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்களை அழைத்து நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டியதும் கட்டாயமாகிறது.

4. மேற்காணும் சூழ்நிலையில், மேலே படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தகுதிகள்/ நிபந்தனைகள்/அறிவுரைகளின் அடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பரிந்துரை செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) கீழ்க்காணும் அலுவலர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்களை ஏற்படுத்தி அரசு ஆணையிடுகிறது : 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews