அரசாணை (நிலை) எண். 27 நாள். 03.09.2020 - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் - கொரோனா (Covid-19) நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டை வழங்குதல் | - ஆணை வெளியிடப்படுகிறது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

அரசாணை (நிலை) எண். 27 நாள். 03.09.2020 - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் - கொரோனா (Covid-19) நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டை வழங்குதல் | - ஆணை வெளியிடப்படுகிறது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் - கொரோனா (Covid-19) நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டை வழங்குதல் | - ஆணை வெளியிடப்படுகிறது.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சநடி-3) துறை
அரசாணை (நிலை) எண். 27 நாள். 03.09.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி, ஆவணி 18
படிக்கப்பட்டவை :-

1 அரசாணை (ப) எண்.72, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-1) துறை நாள் 02.07.2020
2. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் நீதிப்பேராணை எண்.9220/2020-இல் வழங்கிய 04.08.2020 நாளிட்ட இறுதியாணை.
3. சமூக நல ஆணையரின் கடித ந. க. எண். 16706/சஉதி-2/2020, நாள் 07-08-2020,
4. அரசு கடித (L) எண்.96, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-1) துறை, நாள், 14-06-2020 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கோவிட்-19 வைரஸ் நோய் பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளும் விடுமுறையில் உள்ள சூழ்நிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் பயனடையும் மாணவ, மாணவியர்களுக்கு சூடான சத்துமாவு சமைத்து வழங்க முடியாத நிலை உள்ளதாலும், மாணவ மாணவியரின் பாட்டச்சத்து நிலையினை கவனத்தில் கொண்டும், மைய அரசின் அறிவுரையின் அடிப்படையிலும் பள்ளிகளின் கோடை விடுமுறைக் காலமான மே 2020 மாதத்திற்கு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 3.100 கிலோ கிராம் அரிசியும், 1.200 கிலோ கிராம் பருப்பும் உயர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 4.650 கிலோ கிராம் அரிசியும், 1.250 கிலோ கிராம் பருப்பும் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது. இதற்கென மாநில அரசால் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 2. மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜீன், 2020 மாதம் முதல் மீண்டும் இயல்பு நிலை திரும்பி பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை உள்ள பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயனடையும் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 100 கிராம் அரிசியும் 40 கிராம் பருப்பும்,
3. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட இறுதி ஆணையில், ஏனையவற்றுக்கிடையில், சத்துணவுத் திட்டப் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை மே-2020 வரை பள்ளிகளில் வழங்கியது போல முட்டைகளையும் கொரோனா தொற்றுக் காலம் முடியும் வரை (முட்டைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் நாட்கள் மற்றும் நெறிமுறைகள் அரசின் முடிவுக்கு உட்பட்டது) அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களைக் கொண்டு வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

4. சமூக நல ஆணையர் அவர்கள், நீதிப்பேராணை எண். 9220/2020-இல் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் ஆணையின் அடிப்படையில் முட்டைகளை வழங்கும்போது மாணவ மாணவியர்களை அன்றாடம் பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க இயலாது என்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக போக்குவரத்து வசதியின்மை, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றால் ஒரே நேரத்தில் முட்டைகளை வழங்கினால் அவை கெட்டுவிடுவதற்கும் உடைபடவும் வாய்ப்பாகி விடும் என்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற 20,38,745 தொடக்கப் பள்ளி பயனாளிகள், 13,61,165 உயர்தொடக்கப் பள்ளி பயனாளிகள் மற்றும் 4,746 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி பயனாளிகள் ஆக மொத்தம் 34,04,656 பயனாளிகளுக்கு, அப்பயனாளிகளின் பெற்றோர் பாதுகாவலரை உரிய அத்தாட்சியுடன் ஒரு மாதத்தில் இருமுறை அந்தந்த சத்துணவு மையங்களுக்கு நேரில் வரவழைத்து முட்டைகளை உலர் உணவுப் பொருட்களுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை ஈடுபடுத்தி வழங்கி பணிகளை உடனுக்குடன் முடித்திடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துணை ஆணையர் (கல்வி) பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரை கேட்டுக் கொள்ளலாம் என்றும் இதன் பொருட்டு உரிய அரசாணையினை வழங்கிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 5. சமூக நல ஆணையரின் கருத்துருவை மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் அரசு கவனமுடன் பரிசீலனை செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது :-

கொரோனா நோய் பரவல் காரணமாக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் - தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களுடன் செப்டம்பர் -2020 மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு பயனாளிக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் அடிக்கடி வருவதை தவிர்க்கும் விதத்தில், பள்ளிக் கல்வித் துறையினால் வழங்கப்படும் கல்வி உபகரணங்களை வழங்கும் பொழுதே உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளையும் சேர்த்து வழங்க ஆணையிடப்படுகிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பயனாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் பொழுது பின்பற்றப்பட வேண்டி அரசாணை (ப) எண்.72, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள் 02.07.2020-இல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடித்து உலர் உணவுப்பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்க ஆணையிடப்படுகிறது. மேலும் கொரோனா (Covid-19) நோய்த் தொற்று தடுப்பு சம்மந்தமாக அவ்வப்பொழுது அரசால் வெளியிடப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் (SOP) /அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
6. 2020-2021-ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்புகளின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண்.29229/ நிதி(சந்)/2020, நாள்.03-09-2020 -இல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி) சோ. மதுமதி, அரசு செயலாளர்.

பெறுநர், சமூக நல ஆணையர், சென்னை-15. இயக்குநர் (ம) குழும இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews