அரசு கல்லுாரிகளில் சட்டப் படிப்பு இன்று விண்ணப்பம் வினியோகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

அரசு கல்லுாரிகளில் சட்டப் படிப்பு இன்று விண்ணப்பம் வினியோகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சட்டப் பள்ளியில் 3 ஆண்டு படிப்புக்கு நாளை முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். முதுநிலை சட்டபடிப்புகளுக்கு அக்டோபர் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான, எல்.எல்.பி., சட்டப்படிப்புக்கு, வரும், 30ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு: அம்பேத்கர் சட்ட பல்கலையில் உள்ள, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி., மற்றும் இரண்டாண்டு எல்.எல்.எம்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. எல்.எல்.பி.,க்கு, 30ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; அக்., 28க்குள் விண்ணப்பங் களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.எல்.எல்.எம்., சட்ட மேற்படிப்புக்கு, அக்., 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; நவம்பர், 4க்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எல்.எல்.பி.,யில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். CLICK HERE FOR OFFICIAL SITE எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மாணவர்கள், குறைந்தபட்சம், 55 சதவீதம், மற்றவர்கள், 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.இணைப்பு கல்லுாரிகளில் படிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தபட்சம், 40 சதவீதமும், மற்றவர்கள், 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE FOR OFFICIAL SITE
CLICK HERE FOR OFFICIAL SITE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews