தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை -6.
ந.க.எண்.024285/12/இ3/2020, நாள். 14.08.2020
பொருள் - பள்ளிக் கல்வி - சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேவை பட்டியல் கோருதல்-சார்பு.
பார்வை
1. அரசாணை (நிலை) எண்.110, பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்.29.05.2008.
2. அரசாணை (நிலை) எண்.3, பள்ளிக் கல்வி பக5(1) துறை நாள்.05.01.2016.
3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.கஎண்.20594/01/இ3/2020,28.05.2020. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2008-09ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பார்வை 3-ல் காணும் இவ்வியக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின்படி 2020-2021ஆம் கல்வியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அரசு/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான தேவை பட்டியலை 15.09.2020 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U