பிளஸ் 1 சேர்க்கை, இடஒதுக்கீடு அடிப்படையில் நடப்பதை உறுதி செய்ய, கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மற்றொரு புறம், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு அதே பள்ளியில், 11ம் வகுப்பு அட்மிஷன் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் முழுக்க, பிளஸ் 1 சேர்க்கை நேற்று துவங்கியது. கடந்த 10ம் தேதி பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில், சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.
பாடப்பிரிவு தேர்வு செய்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.பிளஸ் 1 வகுப்பில், மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. இதன்படி, பொது பிரிவுக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம், இஸ்லாமியர் 3.5 சதவீதம், ஆதிதிராவிடர் 18 சதவீதம், பழங்குடியினர் ஒரு சதவீதம் என்ற அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில், இடஒதுக்கீடு சதவீதத்தில் முன்னுரிமை வழங்கலாம்.சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளதால், இட ஒதுக்கீடு வழங்காத பள்ளிகளில், கலெக்டர் தலைமையிலான குழு, ஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, ''கோவையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவதற்கான நெறிமுறை அனுப்பப்பட்டுள்ளது. இதில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டிற்கான இடங்கள், பெறப்பட்ட விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதற்கான காரணம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதை பள்ளிகளில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சேர்க்கை துவங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதிக்குள், பள்ளிகளில் இருந்து பட்டியல் பெறப்பட்டு, கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு பின், மறு ஆய்வு பணிகள் நடக்கும்,'' என்றார்.
குறைந்த மதிப்பெண் பெற பள்ளிகள்தான் காரணம்சில பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அந்த பள்ளியிலேயே சேர்க்கை மறுக்கப்படுகிறது. பிற பள்ளிகளிலும் இவர்களுக்கு அட்மிஷன் தர மறுக்கின்றனர். இப்பேர்ப்பட்ட மாணவ, மாணவியர் படிப்பை பாதியில், நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பச்சூழல் உள்ளிட்ட பிற காரணங்கள் இருந்தாலும், பத்தாண்டுகளாக கற்பித்தும், அம்மாணவர் அதிக மதிப்பெண் பெற முடியாததற்கு, சம்பந்தப்பட்ட பள்ளியின் பயிற்சி தரமே காரணம். ஆகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அதே பள்ளியில், 11ம் வகுப்பு சேர்க்கை வழங்குவதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups