ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு
செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
இ.பாஸ் நடைமுறை ரத்து
இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி
மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு
கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு
அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி
CLICK HERE TO READ OFFICIAL NEWS
பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதி
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
கடைகளுக்கு புதிய வழிகாட்டுதல்
வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
டீக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி
தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
உணவகங்களுக்கு கூடுதல் நேரம் - அனுமதி
தமிழ்நாட்டில் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி
பார்சல் சேவை ஏற்கனவே உள்ளது போன்று, இரவு 9 மணி வரைத் தொடரும்
தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு அனுமதி
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள்
உள்ளிட்டவை இயங்க அனுமதி
அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கும்
வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்
CLICK HERE TO READ OFFICIAL NEWSபள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்
மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்
தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்குத் தடை
தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்
கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு
சினிமா ஷூட்டிங்குக்கு அனுமதி
சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு
ஞாயிறு தளர்வற்ற ஊரடங்கு ரத்து
ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் தளர்வற்ற முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் ரத்து
பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடை
தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்
மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி
விமான சேவை - புதிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி
சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும்
செப்டம்பரில் எவற்றிற்கெல்லாம் தடை?
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்கத் தடை
தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்கத் தடை
கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் திறக்க, பொதுமக்கள் கூடத் தடை
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடர்வதாக அறிவிப்பு
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும்
மதம், அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களுக்கும் தடை
மத்திய அரசு அனுமதிக்கும் வழித்தடத்தைத் தவிர, வெளிநாட்டு விமான சேவைக்கான தடை நீட்டிப்பு
CLICK HERE TO READ OFFICIAL NEWS
செப்டம்பரில் எவற்றிற்கெல்லாம் அனுமதி.!
இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருவதற்கு இ.பாஸ் பெற வேண்டும்
கடைகளை கூடுதலாக ஒரு மணி நேரம் திறப்பதற்கு அனுமதி
ஹோட்டல்கள், டீக்கடைகளில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதி
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி
இ.பாஸ் இன்றி, தமிழ்நாட்டிற்கு எங்கு வேண்டுமானலும் செல்ல அனுமதி
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு செப்.7ஆம் தேதி முதல் அனுமதி
வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் செப்.1 முதல் இயங்கும் என அறிவிப்பு
வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு இ.பாஸ் பெற்று செல்ல அனுமதி
தங்கும் விடுதிகளுடன் கூடிய ஹோட்டல்கள் முழு அளவில் இயங்க அனுமதி
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில்., உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அனுமதி
சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள்
உள்ளிட்டவை இயங்க அனுமதி
எவை, எவை கட்டாயம்?
பொது இடங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
பொது இடங்களில் கண்டிப்பாக தனிநபர் இடைவெளி அவசியம்
பணிபுரியும் இடங்களில் ஊழியர்கள் அடிக்கடி சோப் போட்டு கை கழுவ வேண்டும்
அவசிய தேவையின்றி, வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது
வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருவதற்கு இ.பாஸ் பெற வேண்டும்
Auto generated முறையில் கணினி மூலம் சுயமாக பெறும் வகையில் இ.பாஸ் வழங்கப்படும்