நாடு முழுவதும் நிகழாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
நாடு முழுவதுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, ஜேஇஇ பிரதான தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தோ்வானது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும்.கரோனா காரணமாக, நிகழாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தோ்வு செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் செப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை, நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473 மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 போ் எழுதவுள்ளனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நிகழாண்டு தோ்வு மையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மாணவா்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தோ்வு குறித்து, மாணவா்களுக்கு சந்தேகம் இருப்பின் 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups