மாணவர்கள் நேரில் வர வேண்டாம் அரசு கல்லுாரி முதல்வர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

மாணவர்கள் நேரில் வர வேண்டாம் அரசு கல்லுாரி முதல்வர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதற்கட்ட சேர்க்கைக்கு, மாணவர்கள் நேரில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், 2020 - 21ம் கல்வியாண்டிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, நேற்று (28ம் தேதி) முதல், செப்டம்பர் 4 வரை நடக்கிறது. அதில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர் சேர்க்கைக்கு, யாரும் கல்லுாரிக்கு நேரில் வர வேண்டாம்.இதற்காக, மதிப்பெண் மற்றும் இனவாரியான அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் கல்லுாரி இணையதளத்தில் (WWW.tkgac.in) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.அ தன்படி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் சேர்க்கை கட்டணத்தை Principal, State Bank of India, A/c No.11074361992, IFSC: SBIN0000954, MICR:606002001 என்ற கணக்கில் செலுத்த வேண்டும். அதில், கலைப்பிரிவினர் ரூ. 2,075, அறிவியல் பிரிவினர் ரூ.2,095, கணினி அறிவியல் பிரிவினர் ரூ.1,495 செலுத்த வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அனுப்பி வைக்கப்படும். சான்றிதழ்கள், மதிப்பெண்கள் ஏதேனும் போலியானது என கண்டறியப்பட்டால், சேர்க்கை ரத்து செய்யப்படும். இத்தகவலை, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews