சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம் கல்லுாரி மாணவர்கள் பரிந்துரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம் கல்லுாரி மாணவர்கள் பரிந்துரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு அறிவித்து உள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு விதிகளில், மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பரிந்துரை அனுப்பி உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் துவங்கும் நிலையில் கடைப்பிடிப்பதற்கான, 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளில், திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதற்கான புதிய வரைவை, மக்கள் பார்வைக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை காலநிலை செயல்பாட்டு குழு சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஒரு பரிந்துரை அறிக்கையை தயாரித்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அனுப்பி உள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:l 'தொழில்கள் செய்தலை எளிதாக்குதல்' என்ற பெயரில், சுற்றுச்சூழல் சட்டங்கள் படிப்படியாக பலவீனமாக்கப்படுகின்றன. விரிவான மக்கள் பங்கேற்பை உட்படுத்தி, சுற்றுச்சூழல் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்l சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்புக்கான தகவல்களை, ஒரு பருவ காலத்தில் சேகரித்தால் போதும் என்று, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக எதிர்பாராத வகையில், பல்வேறு மாற்றங்கள் காலநிலையில் ஏற்பட்டுள்ளன. இந்த பின்னணியில், தகவல்கள் விஷயத்தில் வழங்கப்பட்ட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். பொது கலந்தாலோசனையில் விலக்கு அளிக்கப்பட்ட திட்டங்களை, மறு ஆய்வு செய்ய வேண்டும்l சுற்றுச்சூழல் விதிகள் அமலாக்கம் குறித்து, தொழில் நிறுவனங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை அறிக்கை அளிக்க வேண்டும். இதில் வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ய வேண்டும்.இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews