Breaking

Sunday, August 02, 2020

சிறுபான்மையினர் கடன் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தனிநபர் தொழில் கடன் திட்டத்தின்கீழ், வியாபாரம் மற்றும் தொழில் தொடங்க அல்லது ஏற்கெனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் பெறலாம். இந்த கடன் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும். இதில், பயன்பெற விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சஙக இணைப் பதிவாளர் அலுவலகம், அனைத்து நகர கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து பயனடையலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog