பணிக்கு வந்தும் பலனில்லை - பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

பணிக்கு வந்தும் பலனில்லை - பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தொற்று சமயத்தில், பணிக்கு வந்து, அலுவலக பணிகள் மேற்கொண்டும், பள்ளி திறந்ததும் பணி நாள் ஈடு செய்ய, உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக, பகுதிநேர ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்கள் கையாள, வாரத்தில் மூன்று அரைநாட்கள், பள்ளிக்கு வர வேண்டும்.மாதம் 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத இச்சூழலிலும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு, பள்ளி திறந்ததும் பணிநாட்கள் ஈடு செய்யுமாறு, மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், தற்போதே பெரும்பாலான பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்கின்றனர். பாடப்புத்தகங்களை வகுப்பு வாரியாக பிரித்து அடுக்குதல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட, அலுவலக பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பள்ளி திறந்த பிறகும், பணிநாட்கள் ஈடு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.'வராதவர்களை குறி வைக்கலாம்'தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் ராஜாதேவகாந்த் கூறுகையில், ''ஊதியம் பெறுவதால், தற்போதே பள்ளிகளில் அலுவலக பணிகள் மேற்கொள்கிறோம். வழக்கமான பணிநாட்களை விட, கூடுதலாக பள்ளி செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இந்நிலையில், பள்ளி திறந்த பிறகும், வேலை நாட்களை ஈடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிக்கு வராதோருக்கு மட்டும், இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கலாம்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews