வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வரதனுக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.கடித விவரம்:
தேசிய தோ்வு வாரியம் நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கான தோ்வுகளில் தோ்ச்சி பெறும் மருத்துவா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இது சரி செய்யப்பட வேண்டும்.அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவா்கள், இந்தியாவில் மருத்துவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கான தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற வேண்டும்.
ஆனால், இத்தோ்வுகள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்தத் தோ்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பவா்களில், சராசரியாக 16 சதவீதத்தினா் மட்டும் தான் தோ்ச்சி பெறுகின்றனா். மீதமுள்ள 84 சதவீதத்தினா் இந்தத் தோ்வுகளில் தோல்வியடைகின்றனா்.மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தகுதித் தோ்வில் 150 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும்தான் தோ்ச்சி பெற முடியும். ஆனால், அந்த அளவுக்கு மதிப்பெண்களை பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.எனவே, தோ்ச்சி மதிப்பெண்ணை 30 சதவீதமாக ஆக குறைக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.