கொரோனாவால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ள நிலையில், வெளிநாட்டில் ஏற்கனவே உயர்கல்வி பயின்று வந்த 7½ லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ள நிலையில், வெளிநாட்டில் ஏற்கனவே உயர்கல்வி பயின்று வந்த 7½ லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு வெளிநாட்டில் கல்வி பயில்வதற்காக விண்ணப்பித்து இருந்த லட்சக்கணக்கான மாணவர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் விசாவிற்கான முன்னெடுப்புகளை கூட செய்யவில்லை.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்பது மட்டுமல்ல, எப்போது முடிவுக்கு வரும் என்பதும் தெரியாத நிலையில் உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வரவேற்க தயாராக இல்லை.
பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்கள் தங்கள் விசாவிற்காக தூதரகங்களை நோக்கி படையெடுப்பார்கள். மாணவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்திருக்க வேண்டிய தூதரகங்கள் அமைதியாக காட்சியளிக்கின்றன. மற்ற சிலவோ எந்த செயல்பாடுகளும் இன்றி உள்ளன.
வெளிநாடு சென்று உயர்கல்வி படிப்பது என்பது சிலருக்கு லட்சியம். சிலருக்கு பெருங்கனவு. சிலருக்கு தீரா மோகம். இந்தியாவில் 52 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் பெருகி அதிகரித்திருக்கும் நிலையில், வெளிநாட்டில் சென்று கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சக தகவல்களின்படி சென்ற ஆண்டு நிலவரப்படி வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரம்.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 736 தான். இந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கு பிரதான காரணம் சிறந்த கல்வி தரம், அந்த கல்விக்கான உலகளாவிய மதிப்பு, ஆய்வுக்கான வசதிகள், படிக்கும் போதே பகுதி நேர சம்பாத்தியத்திற்கான வாய்ப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவையே ஆகும். இந்த வகையில் சுமார் 86 நாடுகளில் நம் நாட்டு மாணவர்கள் படிக்க செல்கின்றனர். ஒப்பீட்டளவில் மருத்துவ கல்விக்கு இந்தியாவை காட்டிலும் சீனா, உக்ரைன், ஜார்ஜியா ஆகிய சில நாடுகளில் கட்டணங்கள் குறைவும் கூட. ஆயினும், வெளிநாட்டு கல்விக்கு இந்தியாவில் இருந்து மாணவர்களை அதிகம் ஈர்க்கும் நாடுகளாக இருப்பவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளே. இவை மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேலானவர்களை ஈர்த்துவிடுகின்றன. ஆனால், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை இந்த ஆண்டு பெற்றோர்களையும், மாணவர்களையும் பின்வாங்க வைத்து விட்டது.
உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு வரை ஆன்லைனில் தான் பாடம் நடத்த போவதாக கூறியுள்ளது. கிரின்விச் பல்கலைக்கழகமோ ஆன்லைன் வகுப்பு தான் நடத்தப்படும். தேவைப்படுமானால் சில நேரங்களில் நேரில் அழைப்போம் எனக் கூறிவிட்டது. இன்னும் சில கல்வி நிறுவனங்களோ அடுத்த இரண்டு செமஸ்டர்களுக்கு வகுப்புகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டதாக கூறியுள்ளன. அதே சமயம் கல்வி கட்டணத்தில் எந்த சலுகையும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தர மறுக்கின்றன.
ஆகவே, வெளிநாட்டு அனுபவம், சூழல், பலதரப்பட்ட மாணவர்களோடு பழகும் அனுபவம், ஆய்வுக்கூட வசதி, நூலக வசதி எதையுமே பயன்படுத்த வாய்ப்பற்ற வெளிநாட்டு கல்வி எதற்கு? என்று மாணவர்கள் நினைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் வாழ்நாள் சேமிப்பையோ அல்லது வங்கி கடனையோ பெற்று தான் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால், வீட்டில் இருந்து படிக்க வெளிநாட்டு கல்வி எதற்கு என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
கொரோனாவினால் எதிர்பாராமல் வெளிநாடுகளில் மாட்டிக்கொண்ட மாணவர்கள் அனைவருமே இந்தியா திரும்பிவிடவில்லை. அங்கே மாட்டிக்கொண்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே பெற்றோர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் படிப்பை பாதியில் விடவும் வழியில்லை, தொடரத்தான் வேண்டும். பகுதி நேர வேலைக்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் வெளி நாட்டிலேயே வேலை வாய்ப்பு பெற்று வாழ ஆசைப்படும் இந்திய மாணவர்களுக்கு இனி அதற்கான வாய்ப்பில்லை என்பது தான் நிதர்சனம் என உணர தொடங்கி உள்ளனர்.
சீன மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் கற்றகல்வியை தங்கள் தாய் நாட்டிற்கே பெருமளவு பயன்படுத்துபவர்களாக உள்ளனர். சீன அரசும் அப்படி திறமையானவர்களை பயன்படுத்தும் அரசாக உள்ளது. அதே போன்ற நிலைமையை இந்திய அரசும் தற்போது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டிற்கும் வெளி நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து பயிலும் நிலைமை உருவாகி வருகிறது. இந்தியாவில் தற்போது 1½ லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் எல்லாம் வந்து படித்ததாக சரித்திரத்தில் நாம் படித்துள்ளோம். நமது இந்திய அரசும் அந்த பொற்காலத்தை மீண்டும் கட்டி எழுப்ப வெளிநாடுவாழ் மாணவர்களுக்கு யோகா, ஆயுர்வேதம், புத்த மதக்கல்வி ஆகியவை கற்பிக்க போவதாகவும், அதற்காக கூடுதலாக 2 லட்சம் மாணவர்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது அந்த கனவும் கலைந்துள்ளது.
வெளிநாட்டு கல்வியை தவிர்க்கும் இந்திய மாணவர்களுக்கு இங்கேயே சிறந்த கல்வியை தருவதற்கான வசதி வாய்ப்புகளை அரசாங்கம் யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. ஏனெனில், வெளிநாட்டில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வெளிநாடுகள் பலன் பெறுகின்றன
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.