Breaking

Wednesday, July 01, 2020

கூட்டல் பிழையின்றி பிளஸ் 2, 'ரிசல்ட்' வருமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், கூட்டல் பிழையின்றி, மதிப்பெண்களை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, மார்ச், 24ல் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், மே மாதம் துவங்கி, ஜூனில் முடிந்தது.மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பின், அவை அனைத்தும், அரசு தேர்வு துறையால் சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மாணவர்களுக்கான மதிப்பெண்களை, கூட்டல் பிழையின்றி, சரிபார்த்து வெளியிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மதிப்பெண்கள் தவறாக குறிப்பிடப்பட்டு, பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு பணம் செலுத்தி, விண்ணப்பித்த பின்பே, இந்த பிழைகள் சரி செய்யப்படுகின்றன.எனவே, இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ள நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண்களை பிழைகள் இன்றி, பலமுறை சரிபார்த்த பின் வெளியிட வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog