Breaking

Friday, July 31, 2020

முழு அறிக்கை பெற்ற பிறகு புதிய கல்வி கொள்கை பற்றி முதல்வர் ஆலோசித்து முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக் கொள்கை குறித்து முழு அறிக்கை கிடைத்த பிறகு முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் வரப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை நேற்று ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்த முழு அறிக்கையையும் பெற்ற பிறகு முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார். ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதி விடுமுறை தினமாக இருப்பதால் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவது வரும் 3ம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்படும். மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பர பலகை வைத்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்வர் பழனிசாமி 2 வாரத்தில் அறிவிப்பார். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்பே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனாவால் பிளஸ்-2 இறுதி தேர்வு எழுத முடியாமல் போன 34 ஆயிரம் பேர் அத்தேர்வை எழுதிதான் ஆக வேண்டும். பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின்பு அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்தே கல்லூரி செல்ல முடியும். ஆனால், கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்ல முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog