தமிழக அரசு அதிரடி உத்தரவு: நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 25, 2020

Comments:0

தமிழக அரசு அதிரடி உத்தரவு: நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிலம் எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆனது
* உட்பிரிவு செய்வதற்கு 10 மடங்கு அதிகம்
* கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் உயர்த்தியதால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனு கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது அந்த துறையின் கடமை ஆகும். CLICK HERE TO READ OFFICIAL NEWS மேலும், நிலத்தை அளந்த போது, எதுவும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மறு அளவீடு கோரியும் விண்ணப்பிக்கவும் செய்கின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தகப்பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் படங்கள், கிராம வரைபடம் ஆகியவை தரப்படுகிறது. இதற்காக நில அளவைத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இக்கட்டணத்தை உயர்த்த நில அளவைத்துறை முடிவு செய்தது. அதன்பேரில் மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் தலைமையில் ஆலேசானைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் கிராம வரைபடங்கள் கட்டணம், உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், புலப்பட நகல் வழங்குதல் உள்ளிட்டவைக்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்தது. CLICK HERE TO READ OFFICIAL NEWS அதன்பேரில் இதற்கான கட்டணத்தை உயர்த்தி வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்: புல அளவீட்டு புத்தக பிரதி ஏ4 அளவு ரூ.20ல் இருந்து ரூ.50 ஆகவும், ஏ3 அளவு ரூ.100 ஆகவும், புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதல் ரூ.30ல் இருந்து ரூ.300 ஆகவும், நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ50ல் இருந்து ரூ400 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ30ல் இருந்து ரூ1000 ஆகவும், நன்செய் நிலம் ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், CLICK HERE TO READ OFFICIAL NEWS மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆகவும், நன்செய் நிலம் ரூ60ல் இருந்து ரூ4 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நில அளவை குறியீட்டின் தொகை செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆகவும், மாவட்ட வரைபடம் (வண்ணம்) ரூ189ல் இருந்து ரூ500 ஆகவும், மாவட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ51ல் இருந்து ரூ300 ஆகவும், வட்ட வரைபடம் ரூ357ல் இருந்து ரூ1000 ஆகவும், வட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ51ல் இருந்து ரூ500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூ27ல் இருந்து ரூ50 ஆகவும், கிராம வரைபடம் ரூ85ல் இருந்து ரூ200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ40ல் இருந்து ரூ400 ஆகவும், நகராட்சி பகுதிகளில் ரூ50ல் இருந்து ரூ500 ஆகவும், மாநகராட்சிகளில் ரூ60ல் இருந்து ரூ600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இந்த கட்டணம் உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் செல்வராஜ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நில அளவை பணிகள் சார்ந்த பணிகளுக்கான பயனாளர் கட்டணங்களை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக உரிய அலுவலர்களுக்கு தேவையான அறிவுரை வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் பல மடங்கு மின்கட்டணத்தால் பொதுமக்கள் துவண்டு போயுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் நில அளவை கட்டணமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews