மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நிறுவன முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2020-21 ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பொதுப்பிரிவினர் மேல்நிலை பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதமும், , அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும்.
அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 27 ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை அனைத்து அலுவலக நாட்களிலும், லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், பள்ளி கல்வித்துறை இணையதளம் dse-edn.pon@nic.in ல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன், வரும் 7 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.