இன்றைய சூழ்நிலையில் பலர் தங்களது வேலைகளை பார்க்கவே நேரம் இல்லாமல் 'பிசி'யாக உள்ளனர். போட்டிகள் நிறைந்த உலகில் ஏதாவது ஒன்றிற்காக ஓடிகொண்டே இருக்கிறோம். நாம் உண்டு வேலையுண்டு என்று இருக்கும் இக்காலத்திலும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து சாதிப்பவர்களும் உண்டு. அந்த வகையில் பல ஆண்டுகளாக ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம், புற்று நோயாளி, விபத்தில் சிக்கியவர்கள், இயலாதவர்களுக்கு உதவி என பல 'மல்டி ஹெல்ப்' மனம் கொண்டவராக திகழ்கிறார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் துரை பிரிதிவிராஜ்.
அரசுப்பணியில் நேர்மையானவர் என பெயர் எடுத்தவர், தன் அறையில் எழுதப்பட்டிருக்கும் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' வாசகப்படி செயல்படுகிறார்.இன்றைய கொரோனா கால கட்டத்திலும் பல உதவிகள் செய்து வருகிறார். கர்ப்பிணிகள், மாணவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள் கேட்கும் சான்றிதழ்களை தேடிச்சென்று வழங்குகிறார்.
தன் தம்பியின் நினைவாக 'ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை', 'அப்துல் கலாம் மன நிறைவு இல்லம்' ஏற்படுத்தி கட்டணம் இல்லா ஆம்புலன்ஸ் மூலம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.ஒரு படுக்கை கொண்ட ஆம்புலன்ஸ் இருந்த நிலையில் தற்போது நான்கு படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி மக்கள் சேவையாற்றுகிறார். ஆம்புலன்சில் 'அன்பு ஒன்றே கட்டணம்' என எழுதி வைத்துள்ளார்.பிரிதிவிராஜ் கூறுகையில், ''இதற்காக மாத வருமானத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறேன். வாழும் காலத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த சேவைக்கு நண்பர்களும் உதவி செய்கிறார்கள்,'' என்றார்.இவரை வாழ்த்த 98421 22046
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Congratulations sir
ReplyDeleteCongratulations sir
ReplyDelete