கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் www.tnauonline.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்குகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணை கல்லுாரிகள் உள்ளன. பத்து இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, மற்றும் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில், துணைவேந்தர் குமார், இணையதளம் வாயிலாக துவக்கி வைப்பார்.உறுப்பு கல்லுாரிகளில், 1,600 இடங்களுக்கும், இணைப்பு கல்லுாரிகளில், 3,100 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு மற்றும் விண்ணப்பத்தை நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு. பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லுாரியில் சேர்வதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். நேரில் பல்கலைக்கு வருவதை தவிர்க்கவும். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை, www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
இதர விபரங்களை அறிய, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். விபரங்களுக்கு, 0422 - 6611322, 6611328 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
What is the cut off mark for agriculture sir ?
ReplyDelete