பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 27, 2020

Comments:0

பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வங்கி கணக்கு விபரம் சேகரிப்பு, பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2019-20 கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். 2019-20ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் உயர்கல்விக்கான முயற்சிகளை எடுக்க நிதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 ஆயிரம் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 பேரின் வங்கி கணக்கு மட்டும் 'எமிஸ்'ல் ஏற்றியுள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரத்து 974 பேரின் வங்கி கணக்குகள் பதிவேற்றும் பணி நடக்கிறது. 2019-20 ஆண்டுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews