சூரிய கிரகணம் எத்தனை வகை இருக்கிறது? - ஜூன் 21ல் வரும் கிரகணம் எந்த வகை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 20, 2020

Comments:0

சூரிய கிரகணம் எத்தனை வகை இருக்கிறது? - ஜூன் 21ல் வரும் கிரகணம் எந்த வகை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சூரிய கிரகணம் என்றால் என்ன, சூரிய கிரகணத்தின் வகைகள் எத்தனை. 2020 ஜூன் 21ம் தேதி சூரிய கிரகணம் எந்த வகையான சூரிய கிரகணம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...

ஜூன் 21ல் வரும் கிரகணம் எந்த வகை?
ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழும் சூரிய கிரகணம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். காலை 10:17 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மேலும் மதியம் 2.02 மணிக்கு கிரகணம் முடிவடையும். இதன் பின்னர், 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 14ம் தேதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும். இந்த முறை சூரிய கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம். சூரிய கிரகணம் வகைகள்
சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கும் ஒரு அற்புத நிகழ்வு. சூரிய மண்டலத்தில் சூரியனை கோள்களுள் ஒன்றான பூமி சுற்றி வருகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி சுற்றி வரும் போது சூரியன் பூமி இடையே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் சூரியனை மறைக்கும் நிலையைப் பொறுத்து அதன் சூரிய கிரகண வகைகள் மாறு படுகின்றன. மூன்று வகை சூரிய கிரகணங்கள் உள்ளன. அவை யாவை... வரும் ஜூன் 21ம் தேதி வரக் கூடிய சூரிய கிரகணம் எந்த வகை என்பதை இங்கு பார்ப்போம்.

முழு சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தின் முதல் வகை முழு சூரிய கிரகணம். இந்த நிகழ்வு நடக்கும் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர் கோட்டில் இருக்கும். சூரியனை விட சந்திரன் மிக மிக சிறிய அளவுடையது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை மற்றும் சூரிய ஒளி பூமியை அடையாமல் சற்று வெளிச்சம் குறைவாக இருக்கும் நிலை முழு சூரிய கிரகணம் ஆகும்
பகுதி சூரிய கிரகணம்
இரண்டாவது வகை சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். பகுதி சூரிய கிரகணத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். இதில் சூரியனின் ஒரு மிகச் சிறிய அல்லது ஒரு பகுதியை மறைக்கும் அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.

வளைய சூரிய கிரகணம்
மூன்றாவது வகை சூரிய கிரகணம் வட்ட கிரகணம் அல்லது வளைய சூரிய கிரகணம் ஆகும். வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது, அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும். இருப்பினும் சூரியனை முழுவதுமாக சந்திரனால் மூடப்படாததால் மறைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது. இப்படி வளையல் வடிவத்தில் வரக்கூடிய சூரிய கிரகணத்தை வருடாந்திர சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews