இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் கல்வி (ஆன்லைன்) தொடர்பாக இருதினங்களுக்குப்பின்னர் முதல்வருடன் ஆலோசித்து ஒப்புதல் பெற்றபிறகு அறிவிக்கப்படும், என்றார்.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா? அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.