கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு -அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 24, 2020

Comments:0

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு -அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இனி கூட்டுறவு வங்கிகள் செயல்படும் என்று மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்ம்ரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். இது தொடர்பான அவசரச் சட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 1540 வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஓபிசி பிரிவில் இதர பிரிவு குறித்து ஆராயும் குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பால், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்துதலுக்காக ரூ.15,000 கோடி உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews