கரோனா ஊரடங்கு நீடித்து வரும் சூழலில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணைய வழியிலான இலவச வழிகாட்டல் வகுப்புகள் வரும் 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
முதல் நாள் (ஜூன் 15) வகுப்பில் தமிழ்ச்செம்மல் விருதாளர்,கவிஞர் தங்கம் மூர்த்தி ‘பெற்றோர்களுக்கான வீட்டுப்பாடங்கள்’ எனும் தலைப்பிலும், 2-ம் நாளில் எழுத்தாளரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி ‘இணையவழி வகுப்பறைகளின் அவசியம்’ எனும்தலைப்பிலும், 3-ம் நாளில் பட்டிமன்ற நடுவரும் நடிகருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ‘நகைச்சுவையே நல்ல சுவை’ எனும் தலைப்பிலும், 4-ம் நாளில் அண்ணாபல்கலை. மேனாள் துணைவேந்தர், முனைவர் மன்னர் ஜவஹர் ‘பொன்னான பொறியியல் வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், 5-ம் நாளில் அழகப்பா பல்கலை.மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா ‘உறவுகள் மேம்பட’ எனும் தலைப்பிலும், 6-ம் நாள் இந்திய வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் ஆர்.நந்தகுமார்,‘வாழ வழி - வேற வழி’ எனும்தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
அறுசுவையாக 6 நாட்கள் நடைபெறவுள்ள இந்த வழிகாட்டி வகுப்புகள் காலை 11 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம். இணைப்புக்கான zoom ID – 6251621064 (password – AIM2021). இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 9994119002 என்ற செல்பேசிஎண்ணில் தொடர்பு கொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.