Revised -DSE Proceedings for 10th std Attendance - Last Working Day for SSLC was 16.03.2020 instead of 21.03.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 12, 2020

Comments:0

Revised -DSE Proceedings for 10th std Attendance - Last Working Day for SSLC was 16.03.2020 instead of 21.03.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பில் விடுப்பட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , தொழிற்கல்வி கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிது. 1. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று பொதுத் தேர்வெழுதவிருந்த அனைத்து மாணவர்களின் 2019-20 கல்வியாண்டிற்கான வருகைப் பதிவேடுகளும் 21.03.2020 வரை முழுமையாக இருக்கிறதா என்பரை சரிபார்த்த பின்பு , வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக அடுக்கிக் கட்டி 12.06.2020 ( வெள்ளிகிழமை ) அன்று மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 2. அதே போன்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , தங்கள் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களின் 2019-2020 கல்வியாண்டிற்கான வருகைப் பதிவேடுகளும் 29.02.2020 வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்பு , வருகைப் பதிவேடுகளை பிரிவு வாரியாக ( section wise ) அடுக்கிக் கட்டி 12.06.2020 ( வெள்ளிகிழமை ) அன்று மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews