Breaking

Tuesday, June 09, 2020

ஆசிரியர்களுக்கு பாராட்டு முத்திரை: கல்வித்துறையில் புதிய முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, 'கூகுள், மைக்ரோசாப்ட்' நிறுவனங்களை போல, பாராட்டு முத்திரைகளை, 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்' மூலமாக வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் (TNTP)' எனும்ஆசிரியர்களுக்கான இணைய தளத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம், புதிய பாடத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல், பயிற்சி வழங்கல், வினாத்தாள்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிமுறைகள் என ஏராளமான வசதிகள் உள்ளன. ஆசிரியர்கள் பாடம் சார்ந்த வீடியோக்களை தயாரித்தும், இதில் பதிவேற்றம் செய்யலாம். பாடப்புத்தகத்தில் உள்ள, 'க்யூஆர்' கோடுக்கான வீடியோக்கள் அனைத்தும் இருப்பதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, எளிமையாகியுள்ளது.
இதுவரை, 2.6 லட்சம் ஆசிரியர்கள் இந்த இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கு காலத்திலும், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்காக இந்த இணையதளம் வாயிலாக கற்பித்தல் பணியில் சிறப்பாக பங்காற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு முத்திரையை வழங்கி கவுரவித்து வருகிறது. TNTP இணைய தளம் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் 7 -ம் தேதி அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, தனது முதல் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. இதன் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்ட பாராட்டு முத்திரைகள் வழங்கும் திட்டத்தின் முதல் நிகழ்வாக இதுவரை தானாக முன் வந்து தங்களை பயனர்களாக இணைத்துக் கொண்ட 2.6 இலட்சம் ஆசிரியர்களுக்கு சிறப்பான தொடக்கத்திற்கான முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் பலர் வரவேற்க்கும் விதமாக சமுகவலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர். இதுவரை தங்களை இணைத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் உடனடியாக தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog