பணிநிரவல் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்ட பணியாளர்களை அவர்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு மூப்பனார் பேரவை தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து முதல்வருக்கு மூப்பனார் பேரவை நிறுவனரும் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜெமினி எம்.என்.ராதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ள அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டது.
பல்கழைக்கழக பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அன்றைக்கிருந்த நிர்வாக அதிகாரி சிவதாஸ் மீனா நடத்திய பேச்சுவார்த்தையின் காரணத்தால் 2017 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் சி.மற்றும் டி பிரிவுகளைச் சேர்ந்த 3600 பணியாளர்கள் பல்வேறு அரசு துறைகளுக்கு மாற்றி பணியமர்த்தப்பட்டனர்.இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சி. மற்றும் டி பணியாளர்கள் பிற அரசு துறைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும் அதன் பின் அவர்கள் அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிய மர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதுஆனால் 2017 ஆம் ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட 3,600 பணியாளர்களில் 2040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17 ஆம் தேதி உடன் நிறை வடைந்துவிட்டது. ஆனால் அவர்களை மீண்டும் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது அது மட்டுமன்றி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இது முற்றிலும் நியாயமற்ற செயலாகும் ஏற்கனவே இப்பிரச்னை காரணமாக தாய் தந்தை மற்றும் மனைவி பிள்ளைகளை மூன்றாண்டு காலமாக பிரிந்து பல இழப்புகளை சந்தித்துள்ளனர்.எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி பின்னர் 3 ஆண்டுகள் பணி நிரவல் காலத்தில் பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றி முடித்த 2040 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு அவர்களது நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்பணி வழங்க வேண்டும் பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கக்கூடிய தமிழக முதல்வர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர்களின் இக்கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உதவும்படி தமிழக முதல்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.