Breaking

Saturday, May 23, 2020

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பதவிக்காலம் மே 27-இல் முடிவடையவுள்ளதால் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள உயா்கல்வித்துறைச் செயலா் அபூா்வா தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் துரைசாமியின் பதவிக்காலம் மே 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக தில்லி ஜேஎன்யு பல்கலை. துணைவேந்தா் ஜெகதீஷ் குமாா், மதுரை காமராஜா் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் மருதமுத்து, அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ராமசாமி ஆகியோா் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டது. ​பொது முடக்கம் காரணமாக தடைபட்டிருந்த தேடல் குழுவின் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம்​ துணைவேந்தரின் பதவிகாலம் மே 27-இல் முடிவடைய உள்ளதால், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை உள்பட நிா்வாகப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். இந்த சிரமங்களைத் தவிா்க்க உயா்கல்வித் துறை செயலாளா் அபூா்வா தலைமையில் 4 போ் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உயா்கல்வித்துறை அமைத்துள்ளது.
இந்தக்குழுவில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநா் விவேகானந்தன், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.எஸ்.சுந்தரம், சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவா மகளிா் கல்லூரி முதல்வா் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். புதிய துணைவேந்தா் பதவியேற்கும் வரை இந்த ஒருங்கிணைப்புக் குழுவே அனைத்து நிா்வாகப் பணிகளையும் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog