WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 29, 2020

Comments:0

WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது; மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தின் மூலமாகவே முக்கிய விவரங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்கின்றனர் சமூகத் தளத்தில் இயங்குபவர்கள். தற்போது, வாட்ஸ் அப் வெரிஃபிகேஷன் கோட் மூலம், வேறொரு புதிய சாதனத்தில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆயினும் ஒரு பயனரின் வாட்ஸ்அப் ப்ரோஃபைல் படம் இருப்பதால், விவரம் அறியாத பலர் இதன் மூலமான மோசடியில் அதிகம் ஏமாற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு போதும் ஒரு பயனரின் விவரங்களை வழங்கக் கோரி அதன் பயனர்களிடம் கேட்காது என்றும், வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களுக்கு செயலி மூலம் குறுந்தகவல் அனுப்பாது; ஒருவேளை அவ்வாறு குறுந்தகவல் அனுப்பும் பட்சத்தில் பச்சை நிற வெரிஃபைடு மார்க் தெரியும் என்றும் கூறுகின்றனர்.
வெரிஃபிகேஷன் என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யும் மோசடி தொழில்நுட்ப குழுக்களுக்கு, அந்த கணக்குகளின் சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படுகிறது. எனவே இந்த சரிபார்ப்பு குறிகளை பெறுவதற்கு மோசடி குழுக்கள் பல சதி திட்டங்களுடன் உங்களை நெருங்குகிறது. சரி., இதை எவ்வாறு தவிர்க்கலாம்? வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும். கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இதனால்தான் ஏராளமான மோசடி செய்பவர்களும் ஹேக்கர்களும் வாட்ஸ்அப் செயலியால் ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது வாட்ஸ்அப் மூலமக ஒரு புதிய வகை மோசடி தொடங்கி உள்ளது. வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவினர் போல நடிக்கும் சிலர், ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கின் சரிபார்ப்புக் குறியீட்டை அதாவது வெரிஃபிகேஷன் கோட் - ஐ பகிருமாறு கேட்கிறார்கள். பயனர்கள் தங்கள் வலையில் விழுவதை எளிதாக்குவதற்காக , மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் லோகோவை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், பேஸ்புக்கிற்கு சொந்தமான ஏஜென்ட் ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலம் பயனர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறுகிறது . மேலும், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில் மூலமாகவே அனைத்து பொது அறிவிப்புகளையும் செய்து வருகிறது. ஒரு ட்விட்டர் பயனர் வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர் என சொல்லிக் கொண்டு புதிய எண்ணிலிருந்து செய்தி வந்தபோது, இந்த மோசடி தொடர்பாக ஒருவர் புகாரளித்தார். உலகெங்கிலும் உள்ள அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டுவருவதற்காக இந்த ட்வீட்டை WABetaInfo பகிரங்கப்படுத்தியுள்ளது. . மோசடி செய்ய முயன்றவர் ஸ்பானிஷ் மொழியில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக டேரியோ நவரோவின் ட்வீட்டர் செய்தி கூறுகிறது. பயனர்கள் தங்கள் ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டு எண்ணை வழங்குவதன் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்குமாறு எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவார்கள். . இந்த சரிபார்ப்புக் குறியீடு என்பது புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்யும்போது, பயனர்களின் தொலைபேசிக்கு வரும் OTP தான். பயனர் இந்த OTP ஐ வேறொருவருக்குக் கொடுத்தால், அவர்கள் அதை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்து உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்யக்கூடும். இதன் மூலம் உங்கள் சமீபத்திய அரட்டைகள் மற்றும் நட்பில் உள்ளவர்களுடன் அவர்கள் அணுக முடியாது என்றாலும், ஹேக் செய்த பிறகு நமது மொபைலுக்கு வரும் அல்லது பெறப்படும் எந்த செய்தியும் அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டு விடும். அதுமட்டுமல்ல, உங்கள் சுயவிவரப் படம், நிலை மற்றும் நீங்கள் இணைந்துள்ள குழுக்கள் தொடர்பான அனைத்தும் மோசடியாளர்களுக்கு கிடைத்துவிடும். அதிலிருந்து பல எண்களை மோசடி செய்பவர் எடுத்து பயன்படுத்த முடியும். . இத்தகைய மோசடிகளிலிருந்து விலகி இருங்கள். எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் நிறுவனம் ஒருபோதும் கேட்பதில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, ஒருபோதும் OTP ஐ வேறு யாரிடமும் பகிரவேண்டாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews