Breaking

Wednesday, May 13, 2020

எழுத்தாளர்களுக்கு விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், எழுத்தாளர்களிடம் இருந்து விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு உருவாக்கிய, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்க நிதியிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களுக்கு, விருது வழங்கப்படுகிறது.அந்த வகையில், 2019- -20ம் ஆண்டிற்கு, ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, 10 பேர்; ஆதிதிராவிடர் குறித்து எழுதும், ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என, 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு, விருது வழங்கப்பட உள்ளது. விருதை பெற விரும்புவோர், தங்கள் பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விபரங்களுடன், விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த விபரங்களை, தமிழக அரசின், tn.gov.in என்ற இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள், ஜூன், 15க்குள், 'இயக்குனர், ஆதிதிராவிடர் நலம், சேப்பாக்கம், சென்னை' என்ற, முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog