NAAC தரச்சான்று பெறுவது குறித்து அனைத்து கல்லூரிகளுடன் ஆன்லைன் கருத்தரங்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 17, 2020

Comments:0

NAAC தரச்சான்று பெறுவது குறித்து அனைத்து கல்லூரிகளுடன் ஆன்லைன் கருத்தரங்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
NAAC Conference 2020: நாக் தர சான்றிதழ் பெறுவது குறித்து, அனைத்து கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகளுடன் ஆன்லைன் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் நாக் தரச்சான்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அந்த சான்றை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து ஆன்லைன் மூலமாக கருத்தரங்கு நடைபெறுகிறது.
National Assessment and Accreditation Council NAAC எனப்படும் தேசிய தர மதிப்பீடு கவுன்சிலானது, கல்லூரிகளின் தரத்தை நிர்ணயம் செய்து வருகிறது. பொதுவாக விருப்பமுள்ள கல்லூரிகள் மட்டுமே நாக் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து, அந்த தரச்சான்றை பெற்று வைத்துக் கொள்ளும். நாக் தரச்சான்று பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், யுஜிசியின் மூலமாக கூடுதல் நிதி உதவி, மத்திய அரசின் சலுகைகளை பெற முடியும்.
இந்த நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் தரச்சான்றிதழ் வழங்க தேசிய தர மதிப்பீடு கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நாக் தரச்சான்று பெற்று, பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்லூரியின் கீழ், சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகளை இணைத்து நாக் சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அந்த பணிகள் அப்படியே தள்ளி வைக்கப்பட்டன.
இப்படியான சூழலில், நாக் சான்றிதழ் பெறுவது குறித்து ஆன்லைன் மூலமாக கருத்தரங்கிற்கு தேசிய தர மதிப்பீடு கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள், நிர்வாகிகள் வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.naac.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம். நாக் தர சான்றிதழ் பெறுவது எப்படி, ஒரு கல்லூரியின் கீழ் பல்வேறு கல்லூரிகளை குழுக்களாக இணைப்பது போன்றவை குறித்து சொற்பொழிவு நடைபெறும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews