அனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 08, 2020

Comments:0

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, மார்ச் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் தாங்கள் நீட்டிப்பை விரும்புகின்றன. மாநிலங்களின் முன்மொழிவை பரிசீலிப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே, நேற்று செவ்வாய் கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூடியது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்னும் நான்கு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும், மேலும் மதக் கூட்டங்களுக்கான தடையும் இதே காலத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதை நீட்டிக்க மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்தனர். இதன் மூலம், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்கள் , மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களை உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கவும் அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.
தற்போதைய ஊடரங்கு முடிவடையும் போதும், ​​ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஷாப்பிங் மால்கள், சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும் மத மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கை மேலும்நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச், 25 முதல் நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவுதல் வேகம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் நிலையில், மிகக்குறைவாகவே உள்ளது. எனவே, ஏப்., 14ம் தேதிமுடிவுக்கு வரும் ஊரடங்கை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நோய் தடுப்புத்துறை நிபுணர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்களின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனைநடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
பதுக்கலை தடுக்க நடவடிக்கை கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை பதுக்குதல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, உள்துறை இணை செயலர், புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறும்போது, ''பதுக்கல், கறுப்பு சந்தை விற்பனை ஆகியவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், உரிய இடங்களை சென்றடைவது கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை திருப்தியாக உள்ளது,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews