Breaking

Monday, April 27, 2020

மருத்துவ மேற்படிப்பு: இந்த வாரத்தில் ஆன்லைன் முறை கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது.நாடு முழுவதும், அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.அதன்படி, 2020-2021-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னா் வெளியிடப்பட்டன.அதைத் தொடா்ந்து கடந்த வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 6,455 போ் இடம்பெற்றிருந்தனா். தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை அரசு மருத்துவா்கள் பிடித்தனா்.இந்த நிலையில், வழக்கமாக நேரடியாக நடைபெறும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, கரோனா காரணமாக நிகழாண்டு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் 10 தனியாா் மருத்துவா்கள், 6 அரசு மருத்துவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனா்.இந்தச் சூழலில், மே 4-ம் தேதிக்குள் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. இதன் காரணமாக, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை இந்த வார இறுதியில் தொடங்க தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog