TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.! Shorts அப்படினா என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 04, 2020

Comments:0

TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.! Shorts அப்படினா என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டிக்டாக் உலகப்புகழ் பெற்ற செயலியாகத் தான் இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் ஒரு டன் பயனர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது. ஷார்ட் வீடியோ தளமான அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது. YouTube Wants To Challenge TikTok With New Service Called Shorts.உலகம் முழுக்க சுமார் ஒரு டன் பயனர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது
. ஷார்ட் வீடியோ தளமான இந்த பொழுதுபோக்கு டிக்டாக் அம்சத்திற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் புதிய பயன்பாட்டை அறிமுகம் செய்து இந்த போட்டியில் களமிறங்கத் தயாராகிவிட்டது. டிக்டாக் பயன்பாட்டிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் மட்டும் களத்தில் இறங்கவில்லை, முன்னிலிருந்தே பேஸ்புக் நிறுவனம் லாசோ மற்றும் ரீல்ஸ் என்ற இரண்டு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்கு அம்சத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் சோதனை செய்து வருகிறது. அதேபோல் தற்போது கூகுளின் யூட்யூப் தளத்தில் புதிதாக ஷார்ட் வீடியோ பயன்பாட்டைச் சேர்க்கத் தயாராகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ட்ஸ் (Shorts)' ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின்படி யூடியூப், டிக்டாக் தளத்திற்கு போட்டியாக 'ஷார்ட்ஸ் (Shorts)' எனப்படும் புதிய பயன்பாட்டு முறையை உருவாக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் அர்த்தமே இந்த பயன்பாடு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஷார்ட்ஸ் கூடிய விரைவில் யூடியூப் பக்கத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற யூட்யூப் தளத்தில் இப்படி ஒரு அம்சம் சேர்த்து அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பயனர்கள் யூடியுப் தளத்தைப் பாடல் கேட்பதற்கும், டுட்டோரியல் வீடியோக்களை பார்ப்பதற்கும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே யூட்யூப் தளத்திற்குப் பெருமளவிலான பயனர்கள் குவிந்துள்ளனர்.தேவையான பாடல்களை பதிவிறக்கம் செய்வது எளிது
ஷார்ட்ஸ் போன்ற புதிய அம்சம் வெளியிட்டால், அதன் வெற்றி டிக்டாக்-ஐ விட பல மடங்கு பெரியதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யூட்யூப் அறிமுகம் செய்யும் இந்த வீடியோ தளம், களத்தில் இறங்கினால் இதில் பயனர்களுக்குத் தேவையான பாடல்களும், இசையும், திரைப்படங்களின் வசனங்களும் இவர்கள் யூடியூப் தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் அனைவரும் அறிந்தது போல யூட்யூபில் பாடல்களுக்கும், இசைக்கும் பஞ்சமே இல்லை. டிக்டாக் தளத்தில் பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை இசைக்கும் பாடலுக்கும் அவர்கள் பதிவிறக்கம் செய்வது ஒரு சிக்கலான காரியமாக இருக்கிறது. இந்த நிலையைப் பயன்படுத்தி யூடியூப் நிச்சயம் அதன் ஷார்ட்ஸ் சேவையை வெற்றிபெறச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews