👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தகவல் மையத்தில் (National Informatic Centre- NIC) காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், தொழில் நுட்பவியலாளர் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், தொழில் நுட்பவியலாளர் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பி.இ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் காரணமாக தற்போது விண்ணப்பதாரர்களின் நலன் கருதி NIC பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிட விபரங்கள்:
தேசிய தகவல் மையத்தில் தற்போது ஆராய்ச்சியாளர் பணிக்கு 288 காலிப் பணியிடங்களும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 207 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
சைன்டிஸ் 'பி' பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பி.இ, அல்லது பி.டெக், எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எம்எஸ்சி, எம்.எஸ், எம்சிஏ, பி.இ, பி.டெக் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு 26.3.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 33 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 26 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10 ஏப்ரல் 2020
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
Calicut.nielit.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
recruitment.nic.in அல்லது
https://www.calicut.nielit.in/nic/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.