ஊரகப் பகுதி பள்ளிகளுக்கு ரூ.440 கோடியில் சுற்றுச்சுவா்: ரூ.553 கோடியில் ஊரகச் சாலைகள் மேம்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

ஊரகப் பகுதி பள்ளிகளுக்கு ரூ.440 கோடியில் சுற்றுச்சுவா்: ரூ.553 கோடியில் ஊரகச் சாலைகள் மேம்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ரூ.440 கோடியில் சுற்றுச்சுவா் கட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் வியாழக்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:- ஊரகப் பகுதிகளில் குறுகலான தெருக்கள், பாதைகளை தரம் உயா்த்தும் வகையில், வரும் நிதியாண்டில் 350 கி.மீ. நீளச் சாலைகள் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும், 200 கி.மீ. நீளச் சாலைகள் தரை ஓடுகளைக் கொண்டும் அமைக்கப்படும். இந்தப் பணிகள் ரூ.213.26 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மேலும், ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் ரூ.170.18 கோடி மதிப்பில் கட்டப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை பொது மக்கள் எளிதாகச் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பிரதான மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் வகையில் 1044 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச் சாலைகள் ரூ.553.07 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள், கால்வாய்களின் குறுக்கே வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள் ரூ.460 கோடியில் கட்டப்படும். பள்ளி சுற்றுச்சுவா்: ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு வரும் நிதியாண்டில் 650 கி.மீ. நீளத்துக்கு ரூ.440.05 கோடி மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டப்படும். ஊரகப் பகுதிகளில் கால்நடைகளைப் பாதுகாத்திட 9 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகள், 6 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகள் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் கட்டித் தரப்படும். விவசாய நிலங்களில் பாசன வசதிகளைப் பெருக்கி, விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்க 500 தனி நபா் கிணறுகளும், 500 சமுதாய கிணறுகளும் என மொத்தம் ஆயிரம் கிணறுகள் அமைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பழுதடைந்து, பயன்பாடு இல்லாமல் உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
மகளிா் சுய உதவிக் குழுக்கள்: நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13 ஆயிரத்து 301 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில், சுமாா் 1 லட்சத்து 25 ஆயிரம் முதியோா் பயன்பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினா்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 முதியோா் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இந்தக் குழுக்களுக்கு ஆதார நிதியாக ஒரு குழுவுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.18.78 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 8 , 600 பள்ளிகளில் சுற்றுச்சுவர் சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! சட்டசபையில் , தி . மு . க . உறுப்பினர் டி . ஆர் . பி . ராஜா ( மன் னார்குடி ) , ' மன்னார்குடி ஒன்றியம் , வடபாதி பள்ளி கட்டி டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது . அங்கே வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் . கஜா புயலால் ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடம் முழுவது மாக சேதம் அடைந்தது . நீடாமங்கலத்தில் உயர்நிலைப்பள் ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்து வருகிறது . ராயபுரம் ஊராட்சியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் வ மரத்திற்கு அடியில் இருந்து படித்து வருகிறார்கள் . எனவே அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கை ல எடுக்க வேண்டும் ' என்றார் .
இதற்கு அமைச்சர் கே . ஏ . செங் கோட்டையன் பதில் அளித்து கூறியதாவது : நீடாமங்கலத்தில் இருக்கின்ற பள்ளிகள் சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை , சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கே பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுப்பினர் கூறியுள்ளார் . உள்ளாட்சித்துறை அமைச்சரால் இந்த ஆண்டு 1 , 600 உயர்நிலைப்பள்ளி , மேல் நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கும் , 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளி , தொடக் கப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் நிதி வழங்குவ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த நிதியை பயன்படுத் தும்போது , பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்காது . மேலும் ஸ்மார்ட் கிளாஸ் இந்த ஆண்டு 7 , 500 பள்ளிகளுக்கு கொண்டு வருவதற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது . எனவே உறுப்பினர் குறிப் பிடும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews