12th Computer Applications - How to Get High Marks - Useful Tips! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 03, 2020

Comments:0

12th Computer Applications - How to Get High Marks - Useful Tips!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 பொதுத் தேர்விற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வெழுதி வெற்றி பெற மாதிரி வினாத்தாள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளைக் கொடுத்துவருகிறோம். அந்த வகையில் கணினி பயன்பாடு பாடப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் கணினி ஆசிரியர் வெ.குமரேசன் M.Sc.,B.Ed. அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…
கணினி பயன்பாடு வினாத்தாள் 4 பகுதிகளை உள்ளடக்கியது.
i) 15 ஒரு மதிப்பெண் வினாக்கள்
ii) 9 இரண்டு மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா)
iii) 9 மூன்று மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா)
iv) 10 ஐந்து மதிப்பெண் வினாக்கள் (அல்லது வகை)
பகுதி I: ஒரு மதிப்பெண் வினாக்கள் 1 முதல் 15 வரை உள்ளது. முதலில் புத்தக வினாக்களையும் பின்பு கூடுதல் வினாக்களை ஒவ்வொரு பாடத்திலும் 15 முதல் 20 வரையிலான ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான கேள்வியையும் அதற்கான பதிலையும் தயார் செய்துகொள்ள வேண்டும். படிக்கும் நாமே கேள்விகளையும் பதில்களையும் தயார் செய்துகொள்வதன் மூலம் முழுமையான 15 மதிப்பெண்களைப் பெறலாம். கூடுதல் வினாக்கள் எடுக்கும்போது கண்டிப்பாக இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் விடைகளில் வரும் வினாக்களாக இருக்கக்கூடாது.

பகுதி II: இரண்டு மதிப்பெண் வினாக்கள் 16 முதல் 24 வரை உள்ள வினாக்கள். இதில் மொத்தம் உள்ள 9 வினாக்களில் 6 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இதில் 1 வினா கட்டாயமாக எழுதவேண்டும். முழு மதிப்பெண் பெற இருக்கும் மாணவர்கள் புத்தக வினாக்கள் மட்டுமில்லாமல் கூடுதல் வினாக்களையும் பயிற்சி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் வரும் ‘நினைவில் கொள்க’ பகுதியைப் படித்தால் முழு மதிப்பெண் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

பகுதி III: 25 முதல் 33 வரை உள்ள 9 வினாக்களில் 6 வினாக்களுக்கு விடை எழுதவேண்டும். அதில் ஒன்று கட்டாய வினா வகை. 5, 6, மற்றும் 7 பாடப்பகுதிகளில் வரும் கட்டளை அமைப்பு வினாக்களை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வினாக்களையும் நன்கு படித்து அதன் பிறகு விடையளிக்க வேண்டும். அப்போதுதான் முழு மதிப்பெண்களைப் பெற முடியும். 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும் முன் கட்டாய வினாவைத் தவிர மற்ற 5 வினாக்களை நமக்குத் தெரிந்த எளிமையான வினாக்களைத் தேர்வு செய்து எழுதவும்.
பகுதி VI: 34 முதல் 38 வரை உள்ள 5 மதிப்பெண் வினாக்கள் (அல்லது வகை) இந்தப் பகுதியில் நாம் 5 வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். இதில் ‘அல்லது’ வகை வினாக்களைத் தேர்வு செய்யும்போது நன்கு படித்த எளிமையான வினாக்களைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். அப்போதுதான் முழு மதிப்பெண்களான 5 மதிப்பெண்களையும் பெற முடியும். 5 மதிப்பெண் வினாக்களைப் படிக்கும்போது மொத்தமுள்ள 18 பாடங்களை 5 பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
பகுதி I = 1 முதல் 3 பாடம் = 3
பகுதி II = 4 முதல் 7 பாடம் = 4
பகுதி III = 8 முதல் 9 பாடம் = 2
பகுதி IV = 10 முதல் 14 பாடம் = 5
பகுதி V =15 முதல் 18 பாடம் = 4 .
முழுமையான மதிப்பெண் பெறஅனைத்து வகை வினாக்களையும் நன்கு பயிற்சிசெய்து தேர்வுக்கு முன் தவறில்லாமல் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு பாடப் பகுதியில் புத்தக வினாக்கள் அனைத்தையும் நன்கு பயிற்சி செய்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடப்பகுதியைப் படிப்பதற்கு முன்பு ‘நினைவில் கொள்க’ பகுதியைப் படித்து விட்டுச் சென்றால் எளிமையாகப் படிக்க முடியும். வினாத்தாள்களிலுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் முன் (ஒரு மதிப்பெண் தவிர) எளிமையான நன்கு படித்த முழு மதிப்பெண் தரக்கூடிய வினாக்களைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும்.
மெல்ல கற்போர்:
மெல்ல கற்போர் முதலில் எளிமையான பாடங்களைத் தேர்வுசெய்துகொண்டு படிக்க வேண்டும். கணினி பயன்பாடு மாணவர்கள் 15, 16, 17, 18 ஆகிய பாடங்கள் வணிகம் சார்ந்துள்ளதால், இதிலுள்ள 5, 3, 2 மதிப்பெண்களுக்கு எளிமையாக விடையளிக்கலாம். 1, 2, 3 ஆகிய பாடங்களையும் 6, 7 பாடங்களையும் நன்றாகப் படித்தால் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும். பின்பு நல்ல மதிப்பெண்கள் பெற மற்ற பாடங்களைக் கவனமாக படித்துக்கொள்ள வேண்டும்.
திரு வெ.குமரேசன் MSC CS., B.Ed., D.TED.
கணினி பயிற்றுனர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews