👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் கரோனா முன்னெச்சரிக்கை விடுமுறை உத்தரவை மீறி இயங்கும் தனியாா் பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை சாா்பில் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனா். அதுமட்டுமில்லாமல் கரோனா தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தபடுவதுடன், சென்னை மாநகா் முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்கள், பேருந்து நிறுத்தங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், அனைத்து பொது இடங்களிலும் சுத்தமாக கை கழுவும் முறை குறித்த வில்லைகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை: அரசின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். இதை மீறி செயல்படும் நிறுவனங்களை சீல் வைப்பதுடன், அதன் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.