👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 3 பேர் இந்நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. தற்போது அவரும் குணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன் எனவும் கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு எடுத்துள்ள வருமுன் காப்போம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்றார். நோய் அறிகுறி குறித்து கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
விமான நிலையங்களில் நோய் பாதிப்புடன் வருபவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் WORK FROM HOME நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.