👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களிடம், மாற்றி யோசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, அரசு பள்ளியில் எப்.எம்., உருவாக்கி, அசத்தல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலுாரில், பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஒன்று - எட்டாம் வகுப்பு வரை, 369 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை ரமாராணி உட்பட, 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.மாணவ - மாணவியரிடம், அச்சத்தை போக்கவும், மாற்றி யோசிக்கவும், பேசும் திறனை ஊக்கப்படுத்தவும், தொகுப்பாளராக உருவாக்கவும், வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
விழிப்புணர்வு - இதன்படி, தலைமை ஆசிரியை அறையில், 'மைக்' வசதியும், 16 வகுப்பறைகளில், ஸ்பீக்கர் வசதியும் செய்துள்ளனர். இதற்கு, 'குட்டீஸ் எப்.எம்.,' என, பெயரிட்டுள்ளனர்.மதிய உணவு இடைவேளைக்கு பின், 1:00 முதல், 1:15 மணிக்குள், தினமும் ஒரு வகுப்பு என்ற முறையில், மைக் முன் மாணவ - மாணவியர் குவிகின்றனர். திருக்குறள், கணித புதிர், விடுகதை, நகைச்சுவை, ஸ்போக்கன் இங்கிலீஷ் என பேசுகின்றனர். விழிப்புணர்வு பிரசாரமும் செய்கின்றனர். தலைமை ஆசிரியை ரமாராணி கூறியதாவது: கடந்த, 2018 - 19ல், காமராஜர் விருதுக்காக வழங்கிய, 50 ஆயிரம் ரூபாயில், 40 ஆயிரம் ரூபாய் செலவில், குட்டீஸ் எப்.எம்., வசதியை ஏற்படுத்தி உள்ளோம். இதனால், மாணவர்களிடம் மாற்றி யோசிக்கும் பழக்கம் அதிகரிக்கிறது. நிலவேம்பு கஷாயத்தின் நன்மை, 'ஜங்க் புட்' தீமை மற்றும் பொது அறிவு, சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அச்ச உணர்வு குறைந்து, அவர்களின் கற்பனை வளம் பெருகுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
'கற்றல் மீது ஆர்வம்' ஒரு ஊரை பற்றி தெரிவிக்க, 'ஊர் சுத்தலாம் வாங்க' என்ற தலைப்பிலும், ஒரு பாடலை மீண்டும் ரீமேக் செய்து பாடும் தேன்கிண்ணம், சிறப்பு விருந்தினர் என்ற தலைப்பில், தலைவர்கள் குறித்தும் பேசுகின்றனர்.இதனால், குரல் உச்சரிப்பு, குரல் ஏற்றத்தாழ்வு போன்ற பயிற்சியும் பெறுகின்றனர். 'இம்முயற்சி, மாணவ - மாணவியருக்கு, கற்றல் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.