Breaking

Thursday, February 20, 2020

தொல்லியல் அலுவலா் பதவி: சென்னையில் மட்டுமே தோ்வு- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

CLICK HERE TO DOWNLOAD PDF
தொல்லியல் அலுவலா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு சென்னையில் மட்டுமே எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்று பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலா் பதவிக்கான 18 காலியிடங்களுக்கு வரும் 29-இல் எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வானது சென்னை, மதுரை, கோவையில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது சென்னை தோ்வு மையத்தில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு சென்னை நீங்கலாக இதர தோ்வு மையங்களைத் தோ்வு செய்த விண்ணப்பதாரா்களுக்கு அதுகுறித்த தகவல் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog