👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சென்னையை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சென்னை’ மூலம் 18 வயதிற்கு மேற்பட்டு 35 வயதிற்குட்பட்ட கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் செயல்பட்டு வரும் யூத் 4 ஜாப்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 2 மாத குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தை சார்ந்த மேற்படி பயிற்சியில் சேர விருப்பம், தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அரசு புறநகர் மருத்துவமனை, கே.கே.நகர், சென்னை 78, என்ற முகவரிக்கு ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.