2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் 2016ல் ரூ.3.5 லட்சம் செலுத்தி தேர்ச்சி பெற்றதாக சிபிசிஐடி வழக்கு தொடர்ந்துள்ளது. நாராயணன், காவலர் பூபதி மூலம் 5 பேரிடம் ரூ.34 லட்சத்தை பெற்று இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிலும் தனது மனைவி உட்பட 7 பேரிடம் ரூ.73 லட்சம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியுள்ளார் நாராயணன். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றசாட்டை தொடர்ந்து தற்போது விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்திருப்பது வெளிவந்ததற்கு பிறகு குரூப் 2A தேர்விலும் முறைகேடு புகார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த முறைகேடு தேர்வு தொடர்பான புகார்கள் அது சார்ந்த விசாரணைகள் விரிவடைந்து கொண்டே உள்ளன. முக்கியமாக 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட விஏஓ தேர்வுக்கான விசாரணை விரிவடைந்துள்ளது. நேற்று விஏஓ ஆக இருந்த நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாக விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
அதன் அடிப்படையில், 2016ம் ஆண்டு 713 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட விஏஓ தேர்வு குறித்த ஆவணங்களை சமர்பிக்கும்படி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் கேட்டு கொண்டிருப்பதாகவும், அது சார்ந்த ஆவணங்களை இன்று அல்லது நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி சமர்ப்பிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக விஏஓ தேர்வை பொறுத்தவரையில் விஏஓ பணியிடங்களுக்கு மட்டும் தனியாக ஒரு தேர்வை நடத்தும் நடைமுறைதான் 2017ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் இருந்தது. 2017ம் ஆண்டு குரூப் 4 தேர்விலிருந்து தான் விஏஓ தேர்வுக்கான பணியிடங்களை, குரூப் 4 பணியிடங்களுடன் சேர்த்து ஒரே தேர்வாக குரூப் 4 தேர்வு மூலமாகவே தேர்வு பணியிடங்களை நிரப்பக்கூடிய நடைமுறை இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு விஏஓ பணியிடங்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அந்த தேர்வு குறித்த ஒரு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. அதற்கான ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிபிசிஐடியிடம் சமர்பிக்கவுள்ளனர். இது நடந்து முடிந்த தேர்வு என்பதன் காரணமாக இந்த விசாரணை அனைத்தும் சிபிசிஐடி மட்டுமே நடத்தமுடியும் என்பதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்த பிறகு சிபிசிஐடி விசாரணையை நடத்தும் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, 2016 ம் ஆண்டு முதல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அப்போது லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற ஒரு தோ்வரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இது குறித்த விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் -4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது.
இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி 813 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த தோ்வு குறித்த அறிவிப்பை கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்று, தோ்வை எழுதியுள்ளனா். இந்த தோ்வில் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற ஒருவரை பிடித்து சிபிசிஐடி அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குரூப் -4, குரூப்- 2 ஏ தோ்வு முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சில நபா்களே, இந்த தோ்விலும் இடைத் தரகா்களாக செயல்பட்டு ஒரு நபரை தோ்ச்சி பெற வைப்பதற்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு சிபிசிஐடி வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில இடைத்தரகா்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனா். மேலும், இந்த முறைகேடு தொடா்பாக தலைமறைவாக இருக்கும் சிலரை தேடத் தொடங்கியுள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews