👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணக்கீட்டாளர் பதவிக்கான, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்குமாறு, தமிழக மின் வாரியத்திற்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், கணக்கீட்டாளர் பதவியில், 1,300 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தேர்வு அறிவிப்பு, 2020 ஜனவரி, 8ல் வெளியானது. அதற்கு, மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, அதே மாதம், 10ம் தேதி துவங்கியது.
விண்ணப்பிக்க, பிப்., 10ம் தேதியும்; தேர்வு கட்டணம் செலுத்த, 13ம் தேதியும் கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள், நேற்றுடன் முடிவடைந்து விட்டது.
இது குறித்து, பட்டதாரி கள் கூறுகையில், 'கணக்கீட்டாளர் தேர்வு தொடர்பாக போதிய விளம்பரம் செய்யவில்லை. இதனால், அந்த விபரம் பலருக்கு தெரியவில்லை; எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.