👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முறைகேடாக பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள் தொடர்பாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க, உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
தமிழக உயர்கல்வி துறைக்கு வந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அண்ணா பல்கலை சார்பில், பேராசிரியர்களின் சான்றிதழ்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து, விசாரணைநடத்தப்பட்டது.
முதல் கட்டமாக, தனியார் கல்லுாரிகளில் பேராசிரியராக சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், பல பேராசிரியர்கள் போலியாக ஆராய்ச்சி படிப்பு சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. ஆய்வுஇதையடுத்து, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும், உதவி, இணை பேராசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து, பட்டியல் அளிக்க, அண்ணா பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள் மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில் பணிக்கு சேர்ந்த மற்றும் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், பல பேராசிரியர்கள், போலி அனுபவ சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பணி நியமன குழு தலைவர் உட்பட, சில அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சிபாரிசு செய்தனரா?
அவர்களின் நடவடிக்கைகள் நேர்மையாக இருந்ததா; போலி சான்றிதழ்கள் வழியாக பதவி உயர்வு பெற, பணிநியமன கமிட்டியில் உள்ளவர்கள் சிபாரிசு செய்தனரா என, விசாரணை துவங்கியுள்ளது. ஏற்கனவே, சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி, பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது, அண்ணா பல்கலை தரப்பில், எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முடிவில், முறைகேடுகளுக்கு துணைபோனவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.