👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, மார்ச், 1 முதல், 31ம் தேதி வரை, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக, சென்னையில் உள்ள, ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், எழுத்தர் உட்பட, ஆறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், ஏப்ரல், 15 முதல், 25ம் தேதி வரை, திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது.கடலுார், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தவரும், இந்த முகாமில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர்,
www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில், மார்ச், 1 முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தோர், மார்ச், 31க்குப் பின், ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆள்சேர்ப்பு வெளிப்படையாகவும், நியாய மாகவும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பும், பயிற்சியும் மட்டுமே, தேர்வில் வெற்றியை உறுதி செய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
டிமாண்ட் டிராப்ட் ‘கமாண் டென்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகவும் (
www.rimc.gov.in) செலுத்தலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.