👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பீடு செய்ய, பஸ்சில் கொண்டு வரப்பட்ட விடைத்தாள் கட்டு மாயமாகி, மூன்று மாதங்களுக்கு பின், அதே பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதம் நடந்து உள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகரில், மதுரை காமராஜ் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட, 90 கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், செமஸ்டர் தேர்வுகள் நவம்பரில் நடந்தன. விடைத்தாள்கள், பல்கலைக்கு சொந்தமான பஸ்சில், பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.திண்டுக்கல் கல்லுாரிபிப்ரவரி முதல் வாரத்தில், விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, தேர்வு முடிவுகள் அறிவிக்க இருந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லுாரி ஒன்றின் விடைத்தாள் கட்டு மாயமானது தெரிந்தது.
மாயமான கட்டை தேடும் பணியை, பல்கலை தீவிரப்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பஸ்சில், அந்த கட்டு இருந்ததாக, சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு, தேர்வாணையர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.பேராசிரியர்கள் கூறியதாவது:அந்த பஸ்சில் தினமும், 40 பேர் பல்கலைக்கு வந்து செல்கின்றனர். மூன்று மாதங்களாக, யார் கண்ணிலும் தென்படாத அந்த கட்டு, பல்கலையால் தீவிரமாக தேடப்படுகிறது என்றதும், அதே பஸ்சில் கிடைத்துள்ளது வினோதமாக உள்ளது.
இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. துணைவேந்தர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிடைத்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவை, ஒரு வாரத்திற்குள் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், கட்டு மாயமான சர்ச்சை குறித்து விசாரிக்கப்படும்' என்றார்.15 பேரிடம் விசாரணைஇதையடுத்து, துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில், அவசர சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
15க்கும் மேற்பட்டோரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது:மாயமானது, 153 விடைத்தாள் தான். கவனக்குறைவால் இப்பிரச்னை ஏற்பட்டது. துணை பதிவாளர், உதவி பதிவாளர், கண்காணிப்பாளர், அலுவலர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது. சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.