உதவித்தொகைத் திட்டம்
இந்த உதவித்தொகையைப் பெறுவதன் மூலம் யு.கே.வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியைப் பெற முடியும். கல்விநிறு வனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பைப் பெறலாம்.
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உரிய கால அவகாசமுள்ள இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அவசியம்.
* யு.கே.வில் முதுநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலைப் பட்டப் படிப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
* யு.கே. உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கிலப் புலமையைப் பெற்றிருப்பது அவசியம். அதாவது, உரிய ஆங்கில மொழிப் புலமைப் பரிசோதனைத் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு:
பங்குபெறும் கல்விநிறுவனங்களுக்கு ஏற்ப படிப்புகள், விண்ணப்பிக்கும் தேதிகள், உதவித்தொகைகள் (சுமார் 8 லட்சம் ரூபாய்) மாறுபடும்.
பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்:
* இம்பெரியல் காலேஜ் லண்டன்: யு.கே.வில் அறிவியல், மருத்துவம், எஞ்சினியரிங் மற்றும் வணிகம் ஆகிய படிப்புகளை வழங்கும் பிரதான கல்வி நிறுவனம். சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இக்கல்வி நிறுவனம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு www.imperial.ac.uk என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.