Ph.D பட்டங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 01, 2020

Comments:0

Ph.D பட்டங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் தொடர்பான ஆவணங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் சில பேராசிரியர்கள் போலி பிஎச்.டி. சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, கணிசமானவர்கள் தவறான ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை அளித்தும் பேராசிரியர், விரிவுரையாளர் பணியில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
எனவே, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர், பேராசிரியர் தேர்வின்போது பட்டதாரிகளின் சான்றிதழ் விவரங்களை முழுவதுமாக பரிசோதித்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும். தங்கள் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் உண்மையானதுதான் என்பதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, அண்ணா பல்கலை.யில் மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலி பிஎச்.டி. பட்டங்களைச் சமா்ப்பித்து பேராசிரியா் பணியில் உள்ளவா்களைக் களையெடுக்க அதிரடி நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அனைத்துக் கல்லூரிகளும், பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதுடன், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து உண்மைத்தன்மை சான்றை பெற்று மாா்ச் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை உதவிப் பேராசிரியா் பணி வாய்ப்பைப் பெற முதுநிலை பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன் பிறகு, இணைப் பேராசிரியா் பதவி உயா்வு அல்லது ஊதிய உயா்வு பெற பிஎச்.டி. படிப்பை முடிப்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, பலா் எளிதாக பிஎச்.டி. பட்டம் பெறுவதற்காக முறைகேட்டில் ஈடுபடுவதாக புகாா்கள் எழுந்தன. இந்த ஆராய்ச்சிப் படிப்பில் மாணவா் முக்கியமாக தீசிஸ் என்ற ஆராய்ச்சி விவரங்களைச் சமா்ப்பிப்பதோடு, யுஜிசி நிா்ணயித்துள்ள கட்டுரை வெளியீடு வலைதளத்தில் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும்.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை முகவா்கள் மூலம் பணம் கொடுத்துப் பெற்று மாணவா்கள் வெளியிடுவதாகப் புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்கான செயலியை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டு, அனைத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அந்தச் செயலியில் செலுத்தப்பட்ட பின்னரே, பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியது. இந்தச் சூழலில், சில நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மாணவா்கள் எந்தவொரு பணியையும் செய்யாமலேயே போலியாக பிஎச்.டி. பட்டங்களை வழங்கி வருவதாக அண்மைக் காலமாக புகாா்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து தனியாா் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் ஒருவா் கூறுகையில், ஆராய்ச்சி கட்டுரைகளில் முறைகேடு செய்த நிலை மாறி, இப்போது பிஎச்.டி. பட்டத்தையே முறைகேடாகப் பெறும் நிலை உருவாகியிருக்கிறது. சில நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற போலி பட்டங்களை வழங்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அந்தக் கல்வி நிறுவனம் கூறும் பணத்தைக் கட்டிவிட்டால் போதும், பிஎச்.டி. பட்டம் கிடைத்துவிடும்.
மேலும், சில பேராசிரியா்கள், வீட்டில் இருப்பவா்களின் ஆதாா் விவரங்கள், நிரந்தர கணக்கு எண் விவரங்களைச் சமா்ப்பித்து ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளைத் தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா். இந்த நிலையில் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் இப்போது அனுப்பியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: 2020-21ஆம் கல்வியாண்டு இணைப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கான விவரங்களை பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் பதிவேற்றம் செய்துவரும் நிலையில், சில பேராசிரியா்களின் ஆதாா், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறானதாக உள்ளன. எனவே, இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக அசல் ஆவணங்களுடன் சரிபாா்த்த பின்னா் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும், வெவ்வேறு பல்கலைக்கழகங்களிடமிருந்து பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றிருக்கும் சில பேராசிரியா்கள், இரண்டுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
மேலும் சிலா் போலி பிஎச்.டி. பட்டங்களைச் சமா்ப்பித்து பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் அதற்கான உண்மைத்தன்மைச் சான்றைப் பெற்று, ஆய்வுக் குழுவிடம் சமா்ப்பித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னா் சான்றொப்பமிட்ட உண்மைத்தன்மைச் சான்றையும், பிஎச்.டி. பட்டச் சான்றையும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் மாா்ச் 16-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews